அமெரிக்காவில் தவிர்க்கப்பட்ட பாரிய விமான விபத்து

அமெரிக்காவில் தவிர்க்கப்பட்ட பாரிய விமான விபத்து

அமெரிக்காவில் மற்றொரு பயங்கர விமான விபத்து தவிர்க்கப்பட்டது. நியூயார்க்கில் இருந்து பயணித்த சரக்கு விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் இயந்திரத்தில் தீப்பிடித்தது.

இதனையடுத்து ஒன்பது நிமிங்கள் வரை விமானம் பறந்த நிலையில், பின்னர் நியூ ஜெர்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விபத்துக்குள்ளான சரக்கு விமானம் ஃபெடெக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது.

தகவல்களின்படி, விமானம் புறப்பட்டவுடன், பெரிய பறவை அதன் இயந்திரத்தில் மோதியதால் தீப்பிடித்தது. இந்த விபத்தைத் தொடர்ந்து, விமானம் நியூ ஜெர்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை பொது மக்கள் தங்கள் படம் பிடித்திருந்ததுடன், இது தொடர்பான பல காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

ஊடக அறிக்கைகளின்படி, அவசரகால சூழ்நிலையில் விமானம் நியூவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. யாருக்கும் காயம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

விமானத்தில் ஏற்பட்ட தீ, வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டதால், அதிக சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீப காலங்களில் அமெரிக்காவில் பல விமான விபத்துக்கள் நடந்துள்ளன. கடந்த பெப்ரவரி 20ஆம் திகதி, தெற்கு அரிசோனாவில் இரண்டு சிறிய விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

முன்னதாக, வாஷிங்டன் டிசியில் ஹெலிகாப்டர் ஒன்று அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்துடன் மோதியது.

இந்த வாரம், அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத்தில் ஒரு சிறிய மருத்துவ போக்குவரத்து விமானம் கட்டிடங்கள் மீது மோதியதில், அதில் இருந்த ஆறு பேரும் கொல்லப்பட்டனர்.

அதே நேரத்தில், பெப்ரவரி ஆறாம் திகதி, அலாஸ்காவில் 10 பேரை ஏற்றிச் சென்ற ஒரு சிறிய விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அனைவரும் இறந்தனர். இந்த இறப்புகளை அலாஸ்கா பொது பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

பெப்ரவரி 10 ஆம் திகதி, அரிசோனாவில் உள்ள ஸ்காட்ஸ்டேல் விமான நிலையத்தில் இரண்டு தனியார் ஜெட் விமானங்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This