‘கண்ணப்பா’ பட டீசர் வெளியானது

பொலிவுட் இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் வரலாற்று படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் கண்ணப்பா. இத் திரைப்படம் சிவன் பக்தரான கண்ணப்பரை பற்றிய கதையாக இருக்கிறது.
இத் திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் வேடத்தில் நடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி பிரபாஸ், காஜல் அகர்வால், அக்ஷ்ய் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திவ் நடித்திருக்கின்றனர். இப் படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.