எதிரிகளுக்கு எச்சரிக்கை’ – வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.
எதிரிகளுக்கு எச்சரிக்கை என்ற பெயரில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்படுகிறது.
இந்த ஏவுகணை சோதனையை கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் மேற்பார்வையில் நடத்தப்பட்டதாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென் கொரிய கூட்டுப் படைத் தலைவர்களும் ஏவுகணை சோதனையை உறுதிப்படுத்தினர். ஏவுகணை கண்காணிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரியாவின் பாதுகாப்பு சூழலுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களை எச்சரிப்பதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டதாக கொரியா தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை 1,587 கிலோமீட்டர் பயணம் செய்து 130 நிமிடங்கள் எடுத்துக்கொண்டு அதன் இலக்கை அடைந்ததாக கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏவுகணை சோதனை குறித்து கிம் ஜாங்-உன் திருப்தி வெளியிட்டுள்ளார்.
போர் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அணு பாதுகாப்பு கூறுகளின் செயல்திறனை மதிப்பிடுவதன் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் வட கொரியா தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் வடகொரியா நடத்தும் நான்காவது ஏவுகணை சோதனை இதுவாகும். டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு நடத்தப்படும் இரண்டாவது சோதனை இதுவாகும்.
கிம் ஜாங்-உன்னுடன் தான் உடன்படுவதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். மேலும் கிம் ஜாங் உன் ஒரு புத்திசாலி நபர் என்றும் டிரம்ப் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.