ஐக்கிய மக்கள் சக்தியின் நிர்வாகக் குழு கூட்டத்தின் பின் ரணில், சஜித் கலந்துரையாடல் தொடரும்

ஐக்கிய மக்கள் சக்தியின் நிர்வாகக் குழு கூட்டத்திற்கு பிறகு, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியிடையே கலந்துரையாடல்கள் தொடரும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த கலந்துரையாடல்கள் தொடர்பில் இறுதி தீர்மானம் ஐக்கிய மக்கள் சக்தியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.
கடந்த புதன்கிழமை குறித்த நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அன்று விடுமுறை தினம் என்பதால் கூட்டம் நடைபெறவில்லை.
அதன்படி, எதிர்வரும் நாள் ஒன்றில் இந்த நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக கட்சியின் தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையே பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றாலும் எதிர்வரும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் அதன்போது இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கவில்லை.
இரு தரப்பு கட்சி தலைவர்களினதும் இறுதி இணக்கப்பாடு எட்டப்படாத காரணத்தினால் இந்த கலந்துரையாடல்கள் தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து போட்டியிட்டால் அரசியல் தரப்பில் அதிக இலாபங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பதே இரு கட்சிகளினதும் நிலைப்பாடாக காணப்படுகிறது.