உள்ளாட்சித் தேர்தல் எப்போது? வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான திகதி எப்போது அறிவிக்கப்படும் என ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் காத்திருக்கின்றன.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22ஆம் அல்லது 25ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. என்றாலும், மே முதல் வாரத்தில்தான் தேர்தல் நடைபெறும் என ஆளுங்கட்சியின் வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த தேர்தலுக்கான திகதியை நிர்ணயிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று பிற்பகல் விசேட சந்திப்பொன்றை நடத்த உள்ளதாக தெரியவருகிறது.
இந்த சந்திப்பில் திகதி குறித்த இறுதித் தீர்மானமொன்று எடுக்கப்படும் என ஆணைக்குழுவின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அண்மையில் வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, உள்ளூராட்சி மன்றங்கள் தேர்தலுக்குப் பின்னர் ஜூன் 2ஆம் திகதி தமது பணிகளை ஆரம்பிக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்தப் பின்புலத்திலேயே தேர்தல் திகதியை நிர்ணயிப்பதற்கான சந்திப்பை ஆணைக்குழு இன்று நடத்துகிறது.