ஐபிஎல் தொடரில் எடை குறைந்த மட்டைகளை பயன்படுத்த தோனி முடிவு

பிரம்மாண்டமான சிக்ஸர்களை அடிக்க எடைக் கூடிய மட்டைகளைப் பயன்படுத்துவதில் பெயர் பெற்ற எம்.எஸ். தோனி, வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் இலகுவான வில்லோ மட்டைகளைப் பயன்படுத்த விரும்புவதாகக் கூறப்படுகிறது.
ஒரு அறிக்கையின்படி, மீரட்டைச் சேர்ந்த கிரிக்கெட் உபகரண நிறுவனம் இந்த பருவத்தில் 10-20 கிராம் எடை குறைவான மட்டைகளை தோனிக்கு வழங்கியுள்ளது.
“ஒவ்வொரு மட்டையின் எடையும் சுமார் 1230 கிராமுடன் முன்பு இருந்த அதே வடிவத்தைக் கொண்டுள்ளது” என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக தோனி 1250 முதல் 1300 கிராம் வரை எடையுள்ள மட்டைகளைப் பயன்படுத்தினார். தோனி எப்போதும் கனமான மட்டைகளுடன் விளையாடியதாக அவரது முன்னாள் அணி வீரர் ஒருவர் கூறியுள்ளார்.
தற்போது 43 வயதாகும் தோனி ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதான வளாகத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஐபிஎல் தவிர அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் தோனி ஓய்வு பெற்றுவிட்டார். ஐபிஎல் 2024க்கு முன்னதாக, அவர் சிஎஸ்கே அணியின் தலைவர் பதவியிலிருந்தும் விலகினார்.
ருதுராஜ் கெய்க்வாட் தோனிக்கு பின்னர் தலைவர் பதவிக்கு வந்தார். இருப்பினும், கடந்த ஆண்டு புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்த சிஎஸ்கே அணி பிளேஆஃப்களுக்கு தகுதி பெறவில்லை.
ஐபிஎல் வரலாற்றில் ஐந்து முறை பட்டத்தை வென்ற தோனி மிகவும் வெற்றிகரமான தலைவர்களில் ஒருவராவார்.