11 நாட்களில் 450 கோடி வசூல் செய்த ‘சாவா’ திரைப்படம்

லக்ஸ்மன் உடேகர் இயக்கத்தில் மராத்திய பேரரசரின் மூத்த மகன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாறு சாவா எனும் பெயரில் திரைப்படமாக வெளிவந்தது.
இப் படத்தில் பொலிவுட் நடிகர் விக்கி கௌசல் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் நடித்திருந்தனர்.
சுமார் 130 கோடி பட்ஜெட்டில் உருவாகிய இத் திரைப்படம் கடந்த 14 ஆம் திகதி ரிலீஸானது.
இப் படம் சில சிக்கல்களை எதிர்கொண்டாலும் வெளியாகி 11 நாட்களில் உலகளவில் ரூபாய் 450 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.