மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கும் சாத்தியம் – அமைச்சர் தகவல்

எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், வறட்சி நிலைமைகள் மின்சார உற்பத்தி செலவுகளை பாதிக்கும் என்றும், இது கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை மின்சார சபை இலாபத்தைப் பதிவு செய்வது குறித்த கருத்துக்களை தெளிவுபடுத்திய அமைச்சர், மின்சார சபைக்கு எந்த லாபமும் இல்லை, ஆனால் செலவுகள் மட்டுமே உள்ளன என்றார்.
“மின்சார சபையின் செலவுகள் லாப நஷ்டமாக கணக்கிடப்படவில்லை. மின்சார சபை 140 பில்லியன் ரூபா லாபத்தைப் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது முற்றிலும் பொய்,” என்று அவர் கூறினார்.
இலங்கை மின்சார சபை லாபத்தைப் பதிவு செய்யவில்லை, ஆனால் மின்சார உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் நிலுவைகளை மட்டுமே பதிவு செய்கிறது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், நிலவும் வறட்சி நிலைமைகளைப் பொறுத்து மின்சார உற்பத்தி செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்று எரிசக்தி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.