புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஐவரில் மூவர் உயிரிழப்பு – அதிர்ச்சி அறிக்கை

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஐவரில் மூவர் உயிரிழப்பு – அதிர்ச்சி அறிக்கை

இந்தியாவில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட ஐந்து பேரில் மூன்று பேர் உயிரிழக்கின்றனர் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், உலகளாவிய ரீதியில் சுமார் 185 நாடுகளில் புற்றுநோய் பாதிப்பு உள்ளன. 36 வகையான புற்றுநோய்கள் காணப்படுகின்றன.

இந்த வரிசையில் அதிக புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படும் முதல் நாடாக சீனாவும் இரண்டாவது நாடாக அமெரிக்காவும் மூன்றாவது நாடாக இந்தியாவும் உள்ளன.

இந்தியாவில் மட்டும் 13.8 இலட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் ஐந்து புற்றுநோயாளிகளில் மூன்று பேர் உயிரிழக்கின்றனர். குறிப்பாக பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிகமாக உயிரிழக்கின்றனர்.

இதனை தடுக்க வேண்டுமாயின் முன்கூட்டிய பரிசோதனை மிகவும் அவசியம்.

இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் 50 சதவீதமானோர் 50 முதல் 69 வயதுக்குட்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This