பொலன்னறுவையில் அரிசி ஆலை ஒன்று தொடர்பில் அரசாங்கம் விசாரணை

பொலன்னறுவையில் அமைந்துள்ள அரிசி ஆலை ஒன்று தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அரிசி ஆலையில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை விட அதிகமான விலைக்கு அரிசியை விற்பனை செய்வதாகக் கூறிய அவர், இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
குறித்த அரிசி ஆலைக்கு அரசாங்கம் 15 பில்லியன் கடனை வழங்கியதாகவும், அந்தக் கடனைப் பயன்படுத்தி விவசாயியிடமிருந்து அரிசியைப் பெற்று இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.