வறண்ட வானிலை தொடர்ந்தால் மின் கட்டணம் உயர்த்தப்படும் அபாயம்

நாடளாவிய ரீதியில் தற்போது நிலவி வரும் வறண்ட வானிலை தொடருமாக இருந்தால் , மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
மாத்தளை மாவட்ட பொறியியலாளர்களின் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர், மின்சாரக் கட்டணங்கள் 20 வீதம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் எனினும், வறண்ட வானிலை தொடர்ந்தால் அதனை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.
மின்சார சபை 140 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டுவதாகக் கூறினாலும், மின்சார சபைக்கு எந்த இலாபமும் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் , கடந்த ஆண்டு 140 பில்லியன் ரூபாய் இருந்ததாகவும், அது செலவுகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார்.