ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் – பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் வெளியேறின

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் – பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் வெளியேறின

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றில் இருந்து பாகிஸ்தான் அணியும் வங்கதேச அணியும் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நேற்று பங்களாதேசத்திற்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பின்னர் இந்த இரு அணிகளும் முதல் சுற்றில் இருந்து வெளியேறியுள்ளது.

நேற்றையப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 236 ஓட்டங்களை குவித்திருந்தனர்.

பதிலுக்கு களம் இறங்கிய நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றியைப் பதிவு செய்தது. நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திர 112 ஓட்டங்களை குவித்தார்.

இதன் மூலம், சம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப சுற்றில் இருந்து ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அந்த குழுவில் புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து அணி இப்போது முன்னிலை பெற்றுள்ளதுடன், இந்திய அணி இரண்டாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This