இன்சுலின் போதுமான அளவு இல்லாததால் நோயாளர்கள் சிரமம்

இன்சுலின் போதுமான அளவு இல்லாததால் நோயாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக
மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணி தலைவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் உள்ள வைத்தியசாலைகள் உட்பட சில வைத்தியசாலைகள் நோயாளர்களுக்கு இன்சுலின் வழங்கப்படுவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மருத்துவ விநியோக பிரிவு இன்சுலின் விநியோகிக்கப்பட்டதாகக் கூறினாலும்,வைத்தியசாலைகள் தேவையான அளவை விட குறைவாகவே பெறுகின்றன. இதன் விளைவாக, நோயாளர்கள் வெளிப்புற மருந்தகங்களிலிருந்து அதிக விலைக்கு அதனை பெறவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் வைத்தியசாலைகளுக்கு அருகிலுள்ள மருந்தகங்களில் பதிவு செய்யப்படாத மருந்துகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும்
அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சிடம் அவர் வலியுறுத்தினார்.