இந்தியாவில் தற்கொலை இறப்பு வீதம் குறைவு

இந்தியாவில் தற்கொலை இறப்பு வீதம் 30 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைவடைந்துள்ளமை ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இது சுகாதார உத்திகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
1990 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை, இந்தியாவில் தற்கொலை இறப்பு வீதம் 31 · 5 சதவீதமாகக் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலையால் ஏற்படும் இறப்பு வீதத்தில் குறைவு, ஆண்களை விட பெண்களில் அதிகமாகக் காணப்பட்டது.
1990 ஆம் ஆண்டில் பெண்களின் தற்கொலை இறப்பு வீதம் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 16·8 ஆக காணப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் இல் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 10·3 வீதமாகக் குறைவடைந்துள்ளது.
இதேவேளை, 1990 ஆம் ஆண்டில் ஆண்களின் தற்கொலை இறப்பு வீதம் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 20·9 வீதமாக இருந்தது, மேலும் 2021 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 15·7 வீதமாகக் குறைவடைந்துள்ளது.