யானைக் கூட்டத்துடன் மோதிய ரயில் – ரயில் சேவைகள் பாதிப்பு

கல் ஓயா பகுதியில் இன்று காலை ரயில் யானைக் கூட்டத்துடன் மோதியதை அடுத்து மட்டக்களப்பு மார்க்கத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் ஐந்து யானைகள் கொல்லப்பட்டதாகவும், இதன் விளைவாக ரயில் தடம் புரண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் காரணமாக, மட்டக்களப்பு மார்க்கத்தில் செயல்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு இயக்க திட்டமிடப்பட்ட புலதிசி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.