
நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ்
போப் பிரான்சிஸ் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.
அவரது உடல்நிலை மேலும் சிக்கலாகிவிட்டதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
88 வயதான போப் பிரான்சிஸ், சுவாசக் கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது அவருக்கு இரண்டு நுரையீரல்களிலும் நிமோனியா ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போப் பிரான்சிஸின் தற்போதைய உடல்நிலை காரணமாக,நோய் நிலைமை மிகவும் கடுமையானதாக மாறியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES உலகம்
