கூட்டத்தை பார்த்து பயமா? அப்போ இதான் பிரச்சினை

ஒரு சிலருக்கு பயம் என்பதே கிடையாது. ஆனால், இன்னும் சிலர் ஒரு சில விடயங்களைக் குறித்து அதிகம் பயப்படுவார்கள். அதாவது, வீட்டை விட்டு தங்களுக்கு அறிமுகமில்லாத இடங்களுக்கு செல்வதற்கு அச்சப்படுவார்கள். இதற்கு பெயர் அகோராஃபோபியா.
இப் பிரச்சினை தெரியாத இடங்களுக்குச் சென்றால் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தும்.
இப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்களுக்க செல்ல பயப்படுவார்கள், வரிசையில் நிற்க அச்சப்படுவார்கள், எதையும் எதிர்கொள்ளத் தயங்குவார்கள்.
மேலும் புதிய நபர்களின் அறிமுகம் இவர்களுக்கு பெரிதாக பிடிப்பதில்லை. இதனால் தனிமையை விரும்புவார்கள். அந்த தனிமை மிகப்பெரிய மன அழுத்தத்துக்கு வழிவகுக்கும்.
உலகளாவிய ரீதியில் 2 சதவீத மக்கள் இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.