300 ரூபாயை தொடும் தேங்காய் விலை – நுகர்வோர் குற்றச்சாட்டு

300 ரூபாயை தொடும் தேங்காய் விலை – நுகர்வோர் குற்றச்சாட்டு

பொதுமக்களுக்கு நியாயமான விலையில் தேங்காய்களை விற்பனை செய்வதற்காக, அரச பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து தேங்காய்களை வாங்குவதும், சதோச மூலம் விற்பனை செய்வதும் தற்போது பயனற்றதாகிவிட்டதாகவும், நாடு முழுவதும் உள்ள பல சதோச கிளைகளில் தேங்காய்கள் விற்பனை செய்யப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

புறநகர் நகரங்களில் உள்ள தனியார் வியாபாரிகள் ஒரு பெரிய தேங்காயை 290 ரூபாவிற்கு அதிகமாகவும், சராசரி தேங்காயை 260 ரூபாவுக்கும் அதிகமாகவும், சிறிய தேங்காயை 200 ரூபாவுக்கும் விற்பனை செய்வதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

விலை உயர்வு காரணமாக பல நுகர்வோர் தேங்காய் வாங்குவதைத் தவிர்த்து வருவதாகவும், இந்த சூழ்நிலை காரணமாக, வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் ஒரு தேங்காய் 300 ரூபாய்க்கு மேல் விற்கப்படும் என்றும் நுகர்வோர் கூறுகின்றனர்.

Share This