சுகாதார , ஊடக அமைச்சுகளில் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவை ஒப்புதல்
![சுகாதார , ஊடக அமைச்சுகளில் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவை ஒப்புதல் சுகாதார , ஊடக அமைச்சுகளில் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவை ஒப்புதல்](https://oruvan.com/wp-content/uploads/2025/02/Cabinet-decisions-1.jpg)
சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சுகளில் 3,519 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பொது சேவையில் ஆட்சேர்ப்பு செயல்முறை மற்றும் பணியாளர் மேலாண்மையை மறுஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த பிரதமர் ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்த முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்ததை அடுத்து இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
பொது சேவையில் ஆட்சேர்ப்பு செயல்முறையை மறுஆய்வு செய்வதற்கும், தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் காலக்கெடுவை அடையாளம் காண்பதற்கும், அது தொடர்பாக செய்யப்பட வேண்டிய ஆட்சேர்ப்புகளின் எண்ணிக்கையை அடையாளம் காண்பதற்கும், அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் பிரதமரின் செயலாளர் தலைமையில் ஒரு அதிகாரிகள் குழுவை நியமிப்பதற்கு 30-12-2024 அன்று நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன்படி, ஒவ்வொரு அமைச்சு மற்றும் நிறுவனத்திலும் உள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.