
டெல்லியில் ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் 807 பேர் காணாமல் போயுள்ளனர்
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில், கடந்த ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 807 பேர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சராசரியாக நாளொன்றுக்கு 54 பேர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் மற்றும் சிறுமிகள் எனத் தெரியவந்துள்ளது.
டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி, மாயம் ஆனவர்களில் 509 பேர் பெண்கள். இதில் 146 சிறுமிகளும், 45 சிறுவர்களும் அடங்குவர்.
தற்போதுவரை 181 பேர் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 435 பேரைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 2.3 லட்சம் பேர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், தலைநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
