
கெப் வாகனமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 08 பேர் வைத்தியசாலையில்
ராகலையிலிருந்து, சியம்பலாண்டுவ நோக்கி பயணித்த கெப் வாகனமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 08 பேர் காயமடைந்துள்ளனர்.
வலப்பனை, நில்தந்தஹின்ன, அம்பன்வெல்ல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ராகலை, உடுவாமதுரவில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து திரும்பி வந்த ஒரு குழுவினர் சியம்பலாண்டுவவுக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES இலங்கை
