
பொலிஸ் காவல் மற்றும் கைது நடவடிக்கைகளின் போது 79 சந்தேக நபர்கள் உயிரிழப்பு
கடந்த ஐந்து ஆண்டுகளில் 79 சந்தேக நபர்கள் பொலிஸ் காவலில் இருந்த போது அல்லது கைது நடவடிக்கைகளின் போது உயிரிழந்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
49 சந்தேக நபர்கள் காவலில் இருந்தபோது உயிரிழந்தததாகவும் 30 பேர் கைது நடவடிக்கைகளின் போது உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது நடவடிக்கைகளின் போதும் அதற்குப் பின்னர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் பொலிஸாருக்கு வழிகாட்டுதல்களை வழங்க ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த வழிகாட்டுதல்களை அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை வடிவில் வெளியிட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
CATEGORIES இலங்கை
