மனநலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி 78,000 தொலைபேசி அழைப்புகள்

மனநலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி 78,000 தொலைபேசி அழைப்புகள்

மனநலப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் கோரி, கடந்த ஆண்டு (2024) தேசிய மனநல நிறுவனத்திற்கு சுமார் எழுபத்தெட்டாயிரம் தொலைபேசி அழைப்புகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

வீட்டு வன்முறை, இணையக் குற்றம், பாலியல் துன்புறுத்தல், போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகள், மருந்து தொடர்பான பிரச்சினைகள், பாலினம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் கல்வி தொடர்பான பிரச்சினைகள் ஆகியவற்றுக்கு தீர்வுகளைக் கோரி இவ்வாறு அழைப்புகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுமார் இருபத்தி ஆறாயிரம் நபர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க பணியாற்றியுள்ளதாக தேசிய மனநல நிறுவனத்தின் சிறப்பு மனநல மருத்துவர் புஷ்பா ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இணையம் மூலம் ஏற்படும் அழுத்தங்களால் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய ஏராளமான மக்கள், அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தேசிய மனநல நிறுவனத்தின் 1926 ஹாட்லைனையும் தொடர்பு கொண்டுள்ளனர்.

அந்த நபர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க மனநல நிறுவனம் hithawathiya.com உடன் இணைந்து செயல்படுகிறது. 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்தப் பிரச்சினைகளுக்கு குறிப்பாக ஆளாகிறார்கள் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

Share This