மனித பாவனைக்கு உதவாத 75,000 கிலோகிராம் இறக்குமதி
இரு தனியார் இறக்குமதியாளர்களினால் இறக்குமதி செய்யப்பட்ட 03 கொள்கலன்களில் காணப்பட்ட 75,000 கிலோகிராம் அரிசி மனித பாவனைக்குத் தகுதியற்றது என உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர்கள் இனங்காணப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த அரிசித் தொகையை மீள ஒப்படைக்குமாறு இலங்கை சுங்க அதிகாரிகள் இரு இறக்குமதியாளர்களுக்கும் அறிவித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக கடந்த 4ஆம் திகதி அரிசி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியதை அடுத்து சுமார் 3000 மெட்றிக் டொன் அரிசியை இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்துள்ளனர்.
இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு கொள்கலன்களில் 50,000 கிலோகிரோம் அரிசி பாவனைக்கு உதவாதவை மற்றும் 25,000 கிலோ அரிசி இறக்குமதி விதிமுறைகளை மீறி தயாரிப்பு தகவல் லேபிள்கள் மாற்றியமைக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதால் துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்படுவது நிறுத்தப்பட்டது.
சுங்கத்திற்கு கொண்டு வரப்பட்ட 90 வீதத்திற்கும் அதிகமான அரிசி கையிருப்புகளை விடுவிப்பதற்கு சுங்கத்துறை தலையிட்டுள்ளதுடன், திருப்பி அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்ட 03 கொள்கலன்களில் உள்ள அரிசியை திருப்பி அனுப்பாவிட்டால், அவற்றை பறிமுதல் செய்யும் திறன் சுங்கத்திற்கு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.