மனித மூளையில் 7 கிராம் அளவுக்கு மைக்ரோ ப்ளாஸ்டிக் – விஞ்ஞானிகள் அதிர்ச்சி
![மனித மூளையில் 7 கிராம் அளவுக்கு மைக்ரோ ப்ளாஸ்டிக் – விஞ்ஞானிகள் அதிர்ச்சி மனித மூளையில் 7 கிராம் அளவுக்கு மைக்ரோ ப்ளாஸ்டிக் – விஞ்ஞானிகள் அதிர்ச்சி](https://oruvan.com/wp-content/uploads/2025/02/a-plastic-spoon-512x425-1.webp)
மனித மூளையில் மைக்ரோப்ளாஸ்டிக் அளவு அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நேச்சர் மெடிசின் எனும் ஆய்விதழில் வெளியிடப்பட்ட கட்டுரையிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
“குறிப்பாக 8 வருடங்களில் மனித மூளையில் கை்ரோப்ளாஸ்டிக்கின் அளவு அதிகரித்து வருகின்றமை ஐம்பது சதவீதத்தால் அதிகரித்துள்ளது. ஆய்வு செய்யப்பட்ட மூளையில் சுமார் 7 கிராம் மைக்ரோப்ளாஸ்டிக் இருந்துள்ளது.
சரியாக 45 அல்லது 50 வயதானவர்களின் மூளை திசுக்களில் ஒரு கிராமுக்கு 4800 மைக்ரோக்ராம்கள் மைக்ரோப்ளாஸ்டிக் இருந்துள்ளது. அதிலும் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூளை இதிலும் பார்க்க 10 மடங்கு அதிகம்” எனக் கூறியுள்ளார்.