பஸ் விபத்தில் 41 பேர் உடல் கருகி பலி
![பஸ் விபத்தில் 41 பேர் உடல் கருகி பலி பஸ் விபத்தில் 41 பேர் உடல் கருகி பலி](https://oruvan.com/wp-content/uploads/2025/02/iStock-1006045926-pkjyfw1ojs2s9wmrglmg7uf53yg59exz8fhv987yas-1.jpg)
வடக்கு அமெரிக்க நாடான மெக்சிகோவில் குயிண்டினா ரோ மாகாணம் கான்கன் நகரிலிருந்து டபாஸ்கோ நகருக்கு சுமார்48 பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ்ஸொன்று சென்றுள்ளது.
குறித்த பஸ் எஸ்கார்சிகா எனும் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லொறி மீது வேகமாக மோதியுள்ளது.
இவ் விபத்தினால் குறித்த பஸ் தீப்பற்றி எரிந்தததில் பஸ்ஸில் பயணித்தவர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் மற்றும் பொலிஸார் தீயை அணைத்தனர்.
ஆனால், குறித்த சம்பவத்தில் பஸ்ஸில் பயணித்த 41 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.