தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 27 வேட்பாளர்கள் கைது

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 27 வேட்பாளர்கள் கைது

உள்ளூராட்சி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 27 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 106 அரசியல் ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக அதிகாரிகள் 26 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இதுவரை, தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 237 முறைப்பாடுகள் பொலிஸில் பதிவு செய்யப்பட்டுள்ளன,இவற்றில் 65 குற்றவியல் முறைப்பாடுகள் அடங்குகின்றன.

இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் தேர்தல் தொடர்பான 170 முறைப்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்
அவற்றில் பெரும்பாலானவை தேர்தல் சட்ட மீறல்களுடன் தொடர்புடையவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் திகதி அறிவிப்புக்குப் பின்னர் வன்முறைச் செயல்கள் தொடர்பான 13 முறைப்பாடுகள் உட்பட மொத்தம் 2,623 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக
தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share This