கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளம் பெண் ஒருவர் உயிரிழப்பு

வென்னப்புவ வைக்கல பகுதியில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் தெற்கு வைக்கல பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவரே உயிரிழந்தார்.
காதல் உறவு காரணமாக ஏற்பட்ட குடும்ப தகராறில் இந்த கொலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாரவில பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சந்தேக நபர், இந்தக் குற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.