பெண்ணை வற்புறுத்தி கட்டாய திருமணம்…12 பேர் கைது

பெண்ணை வற்புறுத்தி கட்டாய திருமணம்…12 பேர் கைது

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் 18 வயதான பெண்ணை வற்புறுத்தி திருமணம் செய்து வைக்க முயற்சித்த 12 பேர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

குறித்த பெண் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில்,

“உறவினர்கள் அவரை குஜராத்திலுள்ள நவ்சாரி பகுதியிலுள்ள கோயில் ஒன்றுக்கு அழைத்தச் சென்றுள்ளனர். பின் உத்தரப் பிரதேசத்திலுள்ள அவர்களது உறவினரின் இடத்துக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்த நபருடன் திருமணம் செய்து வைத்ததாகவும் அதற்காக தன்னை கட்டாயப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

இம் முறைப்பாட்டின் அடிப்படையில் 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்த பொலிஸார் அவர்களை தேடுவதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This