1000 இற்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் உயிரிழப்பு – சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி
தமிழக கடலோர பகுதிகளில் சுமார் 1000 இற்கும் அதிகமான கடல் ஆமைகள் உயிரிழந்துள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் வனத்துறை சார்பில் கால்நடை மருத்துவர்களுக்கு கடல் ஆமைகளை பரிசோதனை செய்யும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
ஆழ்கடலில் இருக்கும் இக் கடல் ஆமைகள், டிசம்பர் மாதம் முதல் மார்ச் வரையில் தமிழகம் முதல் ஒடிஸா கடலோரப் பகுதிகளில் வந்து முட்டையிடுகின்றன.
இவ்வாறிருக்க தமிழக கடலோரப் பகுதிகளில் 1000 இற்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கடல் ஆமைகளும் இறந்து அழுகிய நிலையில் கரையொதுங்கி வருகின்றன.
கால்நடை மருத்துவர்களுக்கு கடல் ஆமைகளை பரிசோதிப்பதில் அவ்வளவு நிபுணத்துவம் இல்லாததால் அவர்களுக்கு அப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
இப் பயிற்சியில் கடல் ஆமைகளின் உயிரியல், உடற்கூறியல் போன்றவை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.