ஹிரிஸ்ஸகல பகுதியில் விபத்து – யுவதி உயிரிழப்பு
கண்டி, ஹிரஸ்ஸகல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்4ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஸ்கூட்டரும், தனியார் பேருந்தும் மோதுண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
ஸ்கூட்டரில் பயணித்த யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.