ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவித்ததைத் தொடர்ந்து இஸ்ரேலும் விடுவித்து வருகிறது

போர் நிறுத்தத்தின் பின்னர் ஹமாஸ் இஸ்ரேலிய பணயக்கைதிகள் மூவரை விடுவித்துள்ளது.
பணயக்கைதிகள் இஸ்ரேலை சென்றடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, இஸ்ரேல் 369 பலஸ்தீன கைதிகளை விடுவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிலர் மேற்குக் கரைக்கு வந்துள்ளதாகவும், மேலும் பலர் காசாவிற்கு வரவுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதாக ஹமாஸ் குற்றம் சுமத்தியதுடன், பணயக்கைதிகள் விடுதலையை மறு அறிவிப்பு வரை ஒத்திவைப்பதாக அறிவித்திருந்தது.
பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் மீண்டும் தீவிரமான போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹமாஸுக்கு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் திட்டமிட்டவாறு காசாவிலிருந்து இன்று சனிக்கிழமை கைதிகள் மூவரை விடுவிப்பதாக ஹமாஸ் தெரிவித்தது. இதற்கமைய பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.