வெறும் ஒன்பது நாட்களில் 70,944 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

வெறும் ஒன்பது நாட்களில் 70,944 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

2025 ஜனவரி 1 முதல் 9 வரையான காலப்பகுதியில் 70,944 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றலா துறை தெரிவித்துள்ளது.

அவர்களில் பெரும்பாலோர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் எனவும் குறிப்பாக  11,749 பேர் வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11,629 ரஷ்ய சுற்றுலாப் பயணிகளும், இங்கிலாந்திலிருந்து 5,049 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவில் இருந்து 3,055 சுற்றுலாப் பயணிகளும், பிரான்சிலிருந்து 2,714 பேரும், சீனாவில் இருந்து 2,516 பேரும், அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் 2,351 பேரும் வருகை தந்துள்ளனர்.

2024 ஜனவரி முதல் 09 நாட்களுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 13,101 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This