வாகனங்களை விற்பனை செய்ய அவசரப்பட வேண்டாம் – மக்களுக்கு எச்சரிக்கை

வாகனங்களை விற்பனை செய்ய அவசரப்பட வேண்டாம் –  மக்களுக்கு எச்சரிக்கை

வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கமோ அல்லது எந்தவொரு அதிகாரியோ குறிப்பிட்ட திகதி எதனையும் அறிவிக்கவில்லையென இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தமாத இறுதியில் அல்லது எதிர்வரும் ஜனவரி மாதத்தில் பஸ்கள் மற்றும் லொறிகள் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே நம்பிக்கை வெளியிட்டார்.

ஊடகங்களுக்கு இன்று சனிக்கிழமை கருத்து தெரிவிக்கும போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“முதல் கட்டமாக பஸ்கள் மற்றும் லொறிகளின் இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளோம்.

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் இது வரை முன்வைக்கப்படாத நிலையில், பல்வேறு தரப்பினரின் அறிக்கைகளின் அடிப்படையில் வாகனங்களை விற்பனை செய்யவோ கொள்வனவு செய்யவோ அவசரப்பட வேண்டாம்.

உண்மையான தகவல்களையும் தரவுகளையும் நாம் மக்களக்கு வழங்குவோம்  மக்கள் இதுதொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

Share This