ரணில் வழியில் செல்லும் அநுர அரசு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ரணிலின் தொங்கு பாலத்திலே பயணிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” கடந்த அரசாங்கம் பயணித்த தொங்கு பாலத்திலே இந்த அரசாங்கமும் பயணிக்கிறது. அதே வழிமுறைகளையே பின்பற்றி வருகிறது. மொத்த உள்நாட்டு உற்ப்பத்தியில் முதன்மை செலவை 13 வீதமாக மாற்றியுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இவ்வாறான பேச்சுவார்த்தையை நடத்த மாட்டார்கள் என்பது அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் இருந்து நன்றாக தெரிகிறது. இவ்வாறு போனால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. இவ்வாறே போனால் மற்றுமொரு கடன் மறுசீரமைப்பிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
அரசாங்கம் இவற்றை மறைத்து மக்களை முட்டாள்களாக்கி எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
குறுகிய காலத்தில் மூன்றாவது முறையாக மக்கள் அபிப்பிராயத்தை கேட்கும் தேர்தல் வரப்போகிறது. இந்த தேர்தலுக்கு மத்தியில் அரச ஊழியர்களால் சரியான தீர்மானத்தை எடுக்க முடியும்.
ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் தொழிலாளர்களையும் உழைக்கும் மக்களையும் பாதுகாக்கும். உழைக்கும் மக்கள் இல்லாமல் ஒரு நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. அவர்களை மறந்து நடக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.