பல்கலைக்கழக மாணவரை தாக்கிய சந்தேகநபர் கைது

பல்கலைக்கழக மாணவரை தாக்கிய சந்தேகநபர் கைது

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவரை தலைக்கவசம் கொண்டு தாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர், அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினால் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு, உதைக்கப்பட்டதில் காயமடைந்ததாகக் கூறி, கடந்த 29 ஆம் திகதி ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

அதன்படி, ஹோமாகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபர் இன்று (06) ஹோமாகம பொலிஸ் குழுவொன்றினால் மாத்தறை திஹகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திஹகொட பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This