நியூநிலாந்து அணியின் புதிய தலைவராக மிட்செல் சான்ட்னர் அறிவிப்பு
நியூசிலாந்து அணியின் ஒருநாள் போட்டிக்கான தலைவராக மிட்செல் சான்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தலைவராக சான்ட்னரை நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளதாக இன்று (18) அறிவிக்கப்பட்டது.
32 வயதான இந்த இளம் வீரர் இதற்கு முன்னர் பல்வேறு சூழ்நிலைகளில் அணிக்கான ஒருநாள் போட்டிகளின் போது அணியை வழிநடத்தியுள்ளார்.
இடது கை சுழற்பந்து வீச்சாளரான சான்ட்னர், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், நியூசிலாந்தின் அணியின் டி20 போட்டிகளுக்கான தலைவராக மிட்செல் சான்ட்னர் நியமிக்கப்பட்டார்.
சான்ட்னர் இதற்கு முன்பு 24 டி20 போட்டிகளுக்கும் நான்கு ஒருநாள் போட்டிகளுக்கும் தலைமை தாங்கியுள்ளார்.
இந்நிலையில், டிசம்பர் கடைசி வாரத்தில் இலங்கைக்கு எதிரான தொடரில் முழுநேர ஒருநாள் போட்டித் தலைவர் பதவியை அவர் தொடங்குவார்.
2026 டி20 உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக எதிர்வரும் பெப்ரவரியில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாகச் செயல்படுவதே சான்ட்னரின் பதவிக்காலத்தின் முதல் கடமை என்று விளையாட்டு விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சான்ட்னர், “இது ஒரு பெரிய மரியாதை மற்றும் பாக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிற்காக விளையாடுவது சிறுவயதில் ஒரு கனவாக இருந்தது. தற்போது தனது நாட்டை பிரதிநிதித்தப்படுத்தி தலைமை தாங்குவது தனக்கு கிடைத்த மிகப் பெரிய மரியாதை” என்று கூறியுள்ளார்.