டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய அத்தியாயத்தை எழுதினார் மிட்செல் ஸ்டார்க்

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய அத்தியாயத்தை எழுதினார் மிட்செல் ஸ்டார்க்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 100வது டெஸ்ட் போட்டியை விளையாடிய அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், நேற்று (14) தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளார்.

கிங்ஸ்டனில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் அவர் புதிய சாதனையை படைத்துள்ளார்.

இதன்படி, டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வேகமான பந்து வீச்சாளர் என்ற பெருமையை மிட்செல் ஸ்டார்க் பெற்றார். அவர் 7.3 ஓவர்களில் நான்கு ஓட்டமற்ற ஓவர்களாக பந்து வீசி ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இதன்போது அவர் வெறும் ஒன்பது ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். கூடுதலாக, தனது டெஸ்ட் வாழ்க்கையில் 400 விக்கெட்டுகளை கடந்த மிட்செல் ஸ்டார்க், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

இதேவேளை, டெஸ்ட் வரலாற்றில் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த இரண்டாவது அணியாக மாறி மேற்கிந்திய தீவுகள் வரலாறு படைத்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் அவர்கள் 27 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

அதன்படி, நேற்று மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் அவுஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This