டெல்லி பாஜகவுக்கு ஜே.பி. நட்டா வாழ்த்து
![டெல்லி பாஜகவுக்கு ஜே.பி. நட்டா வாழ்த்து டெல்லி பாஜகவுக்கு ஜே.பி. நட்டா வாழ்த்து](https://oruvan.com/wp-content/uploads/2025/02/jp-nadda.webp)
“டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற டெல்லி பாஜகவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என பாஜக தலைவர் ஜே.பி. நட்டா
தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, டெல்லியின் பிரகாசமான மற்றும் முற்போக்கான எதிர்காலத்திற்கான பிரதமர் நரேந்திர மோடியின்
தொலைநோக்குப் பார்வை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாகவும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது,
ஊழலை விட நேர்மையையும், பொய்களை விட உண்மையைத் தேர்ந்தெடுத்ததற்காகவும், அவர்களின் நலனுக்காக உண்மையிலேயே பாடுபடுவதற்கு
அர்ப்பணிப்புடன் செயற்படும் அரசாங்கத்தையும் தேர்ந்தெடுத்ததற்காக டெல்லி மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வெற்றியை சாத்தியமாக்கிய பாஜக தொண்டர்களின் அயராத முயற்சிகளுக்கும், அவர்களின் கடின உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும்
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.