எத்தியோப்பியாவில் ஆற்றில் கவிழ்ந்த லொறி…71 பேர் உயிரிழப்பு
எத்தியோப்பியாவின் சிடாமா பகுதியில் திருமண நிகழ்வு ஒன்றுக்காக ஆட்களை ஏற்றிச் சென்ற லொறியொன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 71 பேர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் இவ் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாரதி ஆற்றுப் பாலத்தில் அதிக வேகமாக லொறியை இயக்கியதுதான் விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.