மோடி தமிழகம் வருகிறார்

மோடி தமிழகம் வருகிறார்

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் கட்சியினர் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்டவற்றில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ள இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் செல்ல உள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார கூட்டம் மதுராந்தகத்தில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. தற்போது 2-வது கட்டமாக நாளைய தினம் புதுச்சேரி, மதுரை என 2 இடங்களில் பிரச்சாரக் கூட்டம் நடைபெறுகிறது.

இதில் பிரதமர் மோடி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட கூட்டணி கட்சியின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட உள்ளதால் இந்தப் பகுதி முழுவதும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் இந்து மற்றும் முஸ்லிம் பக்தர்கள் இடையே பெறும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில் பிரதமர் மோடி இங்கு செல்வது மதரீதியான அரசியலை தமிழ்நாட்டில் வளர்த்து எடுப்பதன் ஊடாக வெற்றிபெற முடியும் என்ற எண்ணத்தில்தான் என ஆளும் திமுக குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

என்றாலும், தமிழக மக்கள் அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் என்றும் திமுக கூறியுள்ளது.

இதேவேளை, அடுத்தவாரம் தமிழகத்துக்கான தேர்தல் திகதியை இந்தியாவின் மத்திய தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )