புதினை சந்திக்கிறார் ஜெலன்ஸ்கி: போர் நிறுத்தம் தொடர்பாக ட்ரம்பை சந்தித்த பின் அறிவிப்பு

புதினை சந்திக்கிறார் ஜெலன்ஸ்கி: போர் நிறுத்தம் தொடர்பாக ட்ரம்பை சந்தித்த பின் அறிவிப்பு

ரஷ்​யா- உக்​ரைன் இடையி​லான போரை நிறுத்​து​வது தொடர்​பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்​புடன் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்​ஸ்கி முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். கடந்த 2022-ம் ஆண்டு பெப்​ர​வரி முதல் ரஷ்​யா, உக்​ரைன் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தீவிர முயற்சி செய்து வருகிறார்.

இதன் ஒரு பகு​தி​யாக கடந்த 15-ம் திகதி ஜனாதிபதி  ட்ரம்​பும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினும் அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம் ஆங்​கரேஜ் நகரில் சந்​தித்​துப் பேசினர். இதைத் தொடர்ந்து உக்​ரைன் ஜெலன்​ஸ்​கி, ட்ரம்பை வாஷிங்டனில் நேற்று முன்​தினம் சந்​தித்​துப் பேசி​னார்.

அப்​போது ஐரோப்​பிய ஒன்​றி​யத்​தின் தலை​வர் உர்​சுலா வோன் டெர் லியென், ஜெர்​மனி பிரதமர் பிரெட்​ரிக் மெர்​ஸ், பிரிட்​டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்​மர், பிரான்ஸ் ஜனாதிபதி  இமானுவேல் மெக்​ரான், இத்​தாலி பிரதமர் மெலோனி, நேட்டோ தலை​வர் மார்க் ரூட் உள்​ளிட்​டோரும் உடன் இருந்​தனர். சுமார் 2 மணி நேரம் பேச்​சு​வார்த்தை நீடித்​தது.

இதன்​பிறகு அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்​பும், உக்​ரைன் ஜனாதிபதி  ஜெலன்​ஸ்​கி​யும் நிருபர்​களுக்கு கூட்​டாக பேட்​டியளித்​தனர். அப்​போது ஜனாதிபதி  ஜெலன்​ஸ்கி கூறிய​தாவது: அமெரிக்கா​வும் ஐரோப்​பிய நாடு​களும் ஒற்​றுமை​யுடன் செயல்​படு​கின்​றன. உக்​ரைனுக்கு ஆதர​வாக ஒட்​டுமொத்த ஐரோப்​பிய தலை​வர்​களும் வாஷிங்​டனில் குவிந்​துள்​ளனர். ஜனாதிபதி ட்ரம்ப் உடனான பேச்​சு​வார்த்தை பயனுள்​ள​தாக அமைந்​தது.

குறிப்​பாக உக்​ரைனின் பாது​காப்பு குறித்து முக்​கிய ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது. உக்​ரைனின் பாது​காப்​புக்கு ஜனாதிபதி ட்ரம்ப் உறுதி அளித்​திருக்​கிறார். உக்​ரைனுக்கு தேவை​யான ஆயுத உதவி​களை வழங்​க​வும் அவர் முன்​வந்​திருக்​கிறார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை சந்​தித்​துப் பேச தயா​ராக இருக்​கிறேன். முதலில் இருதரப்பு பேச்​சு​வார்த்தை நடை​பெறும். இதில் முன்னேற்றம் ஏற்​பட்​டால் அமெரிக்​கா, ரஷ்​யா, உக்​ரைன் இடையே முத்​தரப்பு பேச்​சு​வார்த்தை நடை​பெறும். இவ்​வாறு அவர் தெரிவித்​தார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறிய​தாவது: நேட்​டோ​வில் உக்​ரைன் உறுப்​பின​ராக இல்​லை. எனினும் அந்த நாட்​டுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்​போம். குறிப்​பாக உக்​ரைனின் பாது​காப்பை உறுதி செய்​வோம். உக்​ரைனுக்கு அமெரிக்க வீரர்​களை அனுப்​புவது குறித்து பரிசீலனை செய்​வேன்.

இது​வரை 6 போர்​களை நிறுத்தி உள்​ளேன். குறிப்​பாக இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே அணு ஆயுத போர் மூளும் சூழல் உருவானது. அந்த போரை நிறுத்​தினேன். தற்​போது ரஷ்​யா, உக்​ரைன் இடையி​லான போரை​யும் நிறுத்​து​வேன். ரஷ்​யா, உக்​ரைன், அமெரிக்கா இடையே முத்​தரப்பு பேச்​சு​வார்த்தை நடை​பெறும். அப்​போது போருக்கு முற்​றுப் புள்ளி வைக்​கப்​படும். எப்​போது போர் நிறைவடை​யும் என்​பதை இப்​போதைக்கு உறு​தி​யாக சொல்ல முடி​யாது. ஆனால் நிச்​ச​யம் போருக்கு முற்​றுப் புள்ளி வைக்கப்​படும். இவ்​வாறு ட்ரம்ப் தெரி​வித்​தார்.

Share This