உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 16 பேர் பலி: ஜெலன்ஸ்கி கண்டனம்

உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 16 பேர் பலி: ஜெலன்ஸ்கி கண்டனம்

ரஷியா-உக்ரைன் இடையிலான போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் அமெரிக்கா முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்தத்துக்கு ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன.

இதுதொடர்பாக ரஷியா-உக்ரைன் இடையே விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து ரஷியா நேற்று சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் உள்பட பல கட்டிடங்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியாகினர். மேலும் 34 பேர் படுகாயம் அடைந்தனர்.

ரஷியாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, தாக்குதலில் பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.

 

Share This