திருத்தந்தையின் இறுதி ஆராதனைகளுக்கு மத்தியில் ட்ரம்ப் மற்றும் செலன்ஸ்கி இடையே சந்திப்பு

திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி ஆராதனைகள் இன்று இடம்பெற்ற நிலையில் அதில் பங்கேற்பதற்காக வத்திக்கான் சென்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலன்ஸ்கி இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இறுதி ஆராதனைகளுக்கு முன்னர் புனித பீட்டர்ஸ் பெசிலிக்காவில் இருவரும் சந்தித்துக்கொண்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இருவரிடையே 15 நிமிட கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பு மிகவும் பயனுடையது என வெள்ளை மாளிகையை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இறுதி ஆராதனைகளின் பின்னரும் அமெரிக்க மற்றும் உக்ரைன் ஜனாதிபதிகளுக்கிடையில் மற்றுமொரு சந்திப்பு இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.