
வலிமையான இந்தியாவை மீண்டும் கட்டியெழுப்ப இளைஞர்கள் முன்வர வேண்டும் – அஜித் தோவல்
இந்திய சுதந்திரம் என்பது மிகப்பெரிய விலைக்குப் பிறகு பெறப்பட்டது என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
வளர்ந்த இந்தியா இளம் தலைவர்கள் கலந்துரையாடல் 2.O, புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று ஆரம்பமானது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கலந்துரையாடல் நிகழ்வின் தொடக்கவிழாவில் உரையாற்றிய அஜித் தோவல் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு வலிமையான இந்தியாவை மீண்டும் கட்டியெழுப்ப இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
‘‘சுதந்திர இந்தியா இப்போது இருப்பதுபோல எப்போதும் சுதந்திரமாக இருந்தது இல்லை. இதற்காக நமது முன்னோர்கள் பெரும் தியாகங்களைச் செய்துள்ளனர்.
அவர்கள் பெரும் அவமானங்களைத் தாங்கிக் கொண்டனர். ஆழந்த கையறு நிலைக் காலங்களை அனுபவித்தனர். பலர் தூக்கு மேடையை எதிர்கொண்டனர்” என்றார்.
