நாயை சித்திரவதை செய்த இளைஞனுக்கு விளக்கமறியல்

நானுஓயாவில் நாய் ஒன்று சித்திரவதை செய்து தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞன் எதிர்வரும் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நானுஓயா – எடின்பரோ தோட்டத்தில் வளர்ப்பு நாய் ஒன்றினை கொடூரமாக தாக்கி ஆற்றில் வீசிய சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
குறித்த காணொளி தொடர்பாக நுவரெலிய காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை தொடர்ந்து, நேற்றைய தினம் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர் நானு ஓயா எடின்பரோ தோட்டத்தை சேர்ந்த 17 வயதுடையவர் என காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.