புத்தாண்டில் லக்னோவில் நடந்த கொடூரம் – தாய் மற்றும் சகோதரிகளை கொலை செய்ய இளைஞன்
புத்தாண்டு தினமான இன்று காலை இந்தியாவின் லக்னோவை உலுக்கிய ஐந்து பேர் கொல்லப்பட்ட கொடூரமான சம்பவம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
குற்றம் சாட்டப்பட்டவர் கொலையை காணொளியாக பதிவு செய்து ஒன்லைனில் பகிர்ந்துள்ளார். அதில், தனது தாய் மற்றும் சகோதரிகளின் உயிரற்ற உடல்களைக் காட்டி, அவர்களை எப்படிக் கொன்றார் என்பதையும் விளக்கியுள்ளார்.
அர்ஷத் (24) என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர், ஆக்ராவில் உள்ள தனது சமூகத்தினரும், மற்றவர்களும் தான் இந்த தீவிர நடவடிக்கைக்குக் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறினார். ஆக்ராவைச் சேர்ந்த குடும்பத்தினர் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக லக்னோ வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டைம்ஸ் ஒஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தயின்படி, அர்ஷத்தின் தந்தை பதார், கொலைகளைச் செய்ய உதவியதாக கூறப்பட்டுள்ளது.
கொலைகளுக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்டவர் தனது தந்தையை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு, கொலை தொடர்பில் முறைப்பாடு செய்ய பொலிஸ் நிலையத்திற்குச் சென்றார்.
பதார் தற்போது தலைமறைவாக உள்ளார், மேலும் அவரை அடையாளம் கண்டு கைது செய்ய ரயில் நிலையத்திலிருந்து சிசிடிவி காட்சிகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றன.
கொலைகள் எப்படி நடந்தன?
அர்ஷத் தனது தந்தை, தாய் மற்றும் நான்கு சகோதரிகளுடன் புத்தாண்டைக் கொண்டாட ஆக்ராவிலிருந்து லக்னோவுக்கு வந்துள்ளார்.
நேற்று டிசம்பர் 31ஆம் திகதி, குற்றம் சாட்டப்பட்டவர் தனது குடும்பத்தினரை அஜ்மீருக்கு அழைத்துச் சென்றதுன் உத்தரபிரதேச தலைநகருக்குத் திரும்பிய பின்னர் அவர்களை ஒரு ஹோட்டலில் தங்க வைத்தார்.
டைம்ஸ் ஒஃப் இந்தியாவின் படி, அவர் தனது தாயின் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து, இரவில் அவரது வாயில் துணியை வைத்து அடைத்துள்ளார். அதேபோல், தனது சகோதரிகளின் வாயில் துணியை திணித்து, அவர்களின் மணிக்கட்டுகளை அறுத்துள்ளார்.
அண்டை வீட்டாரால் குடும்பம் துன்புறுத்தப்படுவதாக அர்ஷத் கூறியதாகவும், தனக்கு ஏதாவது நடந்தால் அவர்களின் பாதுகாப்பு குறித்து அஞ்சியதாகவும் மத்திய மண்டல துணை ஆணையர் ரவீனா தியாகி கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டது.
இந்த பயத்தால் உந்தப்பட்டு, அவர்களைக் கொல்ல அர்ஷத் முடிவு செய்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் தனது தந்தையை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்ட பிறகு, பொலிஸ் நிலையத்திற்குச் சென்று தனது நான்கு சகோதரிகள் மற்றும் தாயைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
இதன்படி, பிளேடு மற்றும் துப்பட்டா உள்ளிட்ட கொலைப்பு பயன்படுத்திய ஆயுதங்களை பொலிஸார் மீட்டனர், மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
புதன்கிழமை காலை, கொலைகள் பற்றிய தகவல்கள் பரவத் தொடங்கின. உத்தரபிரதேச தலைநகரின் நாகா பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஷரன்ஜீத்தில் ஒரு அறைக்குள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொலை செய்யப்பட்டதாக ஆரம்ப அறிக்கைகள் தெரிவித்தன.
இறந்தவர்கள் அலியா (9), அலிஷியா (19), அக்சா (16), ரஹீமான் (18) மற்றும் அவர்களது தாய் அஸ்மா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தக் கொலைகள் தொடர்பாக அஸ்மாவின் மகன் அர்ஷத் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஆதாரங்களை சேகரிக்க குற்றம் நடந்த இடத்தில் தடயவியல் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.