உங்கள் பல் வரிசையே குணத்தைக் கூறிவிடும்
![உங்கள் பல் வரிசையே குணத்தைக் கூறிவிடும் உங்கள் பல் வரிசையே குணத்தைக் கூறிவிடும்](https://oruvan.com/wp-content/uploads/2025/02/1856060-implant-permanent-teeth-for-facial-beauty.webp)
கைரேகையை வைத்து முக வடிவத்தை வைத்து ஒருவரின் குணாதிசயம் என்னவென்று கூறுவார்கள். ஆனால், பற்களின் வடிவத்தைக் கொண்டு ஒருவரின் குணாதிசத்தைக் கூறமுடியுமா?
பற்கள் ஒழுங்கான வரிசையாகவும் வெண்மையாகவும் இருந்தால் அவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். அழகான தோற்றத்தைப் பெற்றிருப்பார்கள்.
பற்கள் வெண்மையாகவும் பிரகாசமாகவும் நுனி கூர்மையாகவும் இருந்தால் அவர்கள் உண்மையானவர்களாக இருப்பார்கள். அதிக செல்வ வளம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
அரிசியைப் போல பல்வரிசை காணப்பட்டால் அவர்களின் பேச்சுத் திறமையால் எதையும் எளிதாக செய்துவிடுவார்கள். எந்தவொரு ரகசியத்தையும் தனக்குள் வைத்திருக்க மாட்டார்கள்.
பற்களுக்கு இடையில் இடைவெளி அதிகமாக இருந்தால் அவர்கள் எந்தவொரு இரகசியத்தையும் காப்பாற்ற மாட்டார்கள். வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பார்கள்.
பற்கள் இரண்டு வரிசைகளாக அமைந்தால் அவர்கள் வஞ்ச உணர்வுடன் செயல்படுவார்கள்.
பற்கள் அதிக நீளமாகவும் அகன்றும் பருத்தும் காணப்பட்டால் அவர்களது காரியத்தை பக்குவமாக முடித்துக் கொள்வார்கள். அடிக்கடி மனம் மாறுவார்கள்.
பற்கள் தாறுமாறாக இருந்தால் அவர்கள் முன் கோபக்காரர்களாக இருப்பார்கள்.