இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் – பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் போட்டிகள் இடமாற்றம்

இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் – பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் போட்டிகள் இடமாற்றம்

பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (PSL) மீதமுள்ள எட்டு போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) அறிவித்துள்ளது.

இதன்படி, தகுதிச் சுற்று, எலிமினேட்டர்கள் மற்றும் இறுதிப் போட்டி இரண்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிகளின் சரியான அட்டவணை, திகதிகள் மற்றும் இடங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (PSL) மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, அரசியல் மற்றும் விளையாட்டு ஆகியவை தனித்தனியாக வைக்கப்பட வேண்டும்.

ஆனால் தொடரின் மீதமுள்ள போட்டிகள் “ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தை குறிவைத்த மிகவும் பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான இந்தியச் செயலைத்” தொடர்ந்து மாற்றப்பட்டதாக நக்வி குறிப்பிட்டார்.

Share This