சுப்ரீம் சாட் செயற்கைக்கோள் மூலம் நாட்டுக்கு வருமானம் கிடைத்திருந்தால் ராஜபக்சர் குடும்பம் அமைதியாக இருந்திருக்குமா?

சுப்ரீம் சாட் செயற்கைக்கோள் மூலம் நாட்டுக்கு வருமானம் கிடைத்திருந்தால் ராஜபக்சர் குடும்பம் அமைதியாக இருந்திருக்குமா?

விசாரணையின் முடிவில் சுப்ரீம் சாட் செயற்கைக்கோள் தொடர்பான உண்மையான தகவல்கள் தெரியவரும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் மூலம் நாட்டிற்கு அதிக அளவு வருமானம் கிடைத்திருந்தால், இதுவரை சம்பந்தப்பட்ட தரப்பினர் மௌனமாக இருப்பது சாத்தியமற்ற விடயம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

சுப்ரீம் சாட் செயற்கைக்கோள் ஊடாக இலங்கைக்கு அந்தளவு வருமானம் கிடைத்திருந்தால், ராஜபக்ஷ குடும்பம் 13 வருடங்களாக அமைதியாக இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? கடந்த 13 வருடங்களாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த மாதிரியான வருமானம் வந்தால், ராஜபக்ஷ குடும்பம் அமைதியாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? தங்களுக்கு பலன் இல்லாமல் ராஜபக்ஷ குடும்பம் நாட்டுக்கு ஏதாவது நன்மை செய்யும் என்று நினைக்கிறீர்களா? விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. விசாரணைகளின் முடிவில் என்ன நடந்தது என்பது பற்றி நாம் பேசலாம். சுப்ரீம் சாட் செயற்கைக்கோள் என்பது ஒரு தனித் திட்டம் அல்ல.

இதில் பல திட்டங்கள் உள்ளன. அதனால்தான் அந்த நிறுவனம் அதிக திட்டங்களைச் செய்து வருகிறது. விரைவில் உண்மை வெளிப்படும் என்று நினைக்கிறேன். எனவே ராஜபக்ஷவின் அனைத்து திட்டங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, இதை மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த ராக்கெட் திட்டம் அவர்களின் ஒட்டுமொத்த தலையீடுகளில் எங்கு பொருந்துகிறது என்பதை பார்க்க வேண்டியது அவசியம்.

Share This